வரும் 2020 ஆண்டில் ஜப்பான் நாட்டில் உள்ளா டோக்கியோ நகரில் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதற்கான பதக்கங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடபெறவுள்ள நிலையில், அப்போட்டியில் வென்றவர்களுக்கு வழங்கப்படும் பதக்கம் பழைய செல்போன்கலை மறுசுழற்சி செய்து அதிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதுமையான திட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு வணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பயன்படுதாமல் உள்ள செல்போன்களை பெற்று, அதை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மறுசுழற்சி செய்து அழகான பதங்கங்களாகப் மாற்றி வடிவமைத்துள்ளனர்.இதில் கிரீக் கடவுள் நைக் ஒரு புறமும் மற்றொருபுறம் ஒலிம்பிக் வளையங்கள் ஐந்துடன் ,டோக்கியோ ஒலிம்பிக்போட்டியின் லோகோவும் அசத்தலாகப் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் தங்கள் 555 கிராம் எடை, வெள்ளி 550 கிராம் எடை , வெண்கலப் பதக்கம் 450 கிராம் எடையுடன் இவை உருவாக்கப்பட்டுள்ளது.