ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 141 பேர் உயிரிழந்தனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ தலை நகர் கின்ஷாவில் கடந்த திங்கட்கிழமை அன்று இரவில் கனமழை பெய்ததை அடுத்து, அடுத்த நாள் காலை வரை மழை தொடர்ந்தது.
இந்த நிலையில் விடிய விடிய பெய்த மழையினால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. இதில், தரைப்பாலங்கள், சாலைகள், வாகனங்கள், விலங்குகள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதையடுத்து, அங்கு நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் பலரது வீடுகள் மண்ணில் புதைந்தது. இதில் சிக்கி 141 பேர் உயிரிழந்தததாகத்தகவல் வெளியாகிறது.