14 வயது சிறுமிகள் திருமணம் செய்துக்கொள்ளலாம்: புது சட்டம்

Webdunia
வியாழன், 2 மார்ச் 2017 (17:40 IST)
வங்க தேசத்தில் 14 வயது சிறுமிகள் திருமணம் செய்துக்கொள்ள புதிய திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.


 

 
வங்க தேசத்தில் திருமண வயது வரம்பு சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தியாவை போலவே வங்க தேசத்திலும் ஆங்காங்கே சிறுமிகளுக்கான திருமணம் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் புதிய திருமண சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
அதில் ஆண்களுக்கு திருமண வயது 21, பெண்களுக்கு 18 வயது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் சில விதிவிலக்குகள் உள்ளது. அதன்படி தவிர்க்க முடியாத காரணங்களாக இருந்தால் 14 வயது பூர்த்தி அடைந்த சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதனால் இதுவரை மறைமுகமாக நடந்து வந்த சிறுவர் திருமணம் இனி சட்டத்துக்கு உட்பட்டே நடைப்பெறும். இதற்கு மனித உரிமை அமைப்புகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
 
மேலும் சில அமைப்புகள் இந்த சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
அடுத்த கட்டுரையில்