சொந்த குடும்பத்தினரை சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன் !

புதன், 4 செப்டம்பர் 2019 (20:23 IST)
அமெரிக்கா நாட்டில் உள்ள  அலபாமா மாகாணத்தில் 14 வயது சிறுவன் ஒருவன், தன் சொந்த குடும்பத்தினரையே சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் 14 வயது சிறுவன் ஒருவன் தன் குடும்பத்தைச் சேர்ந்த  5 பேரை  துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார். அதில் தந்தை, மாற்றுத்தாய்,  மற்றும் 3 உடன்பிறப்புகள் ஆவர்.
 
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.  அங்கு ஜான் சிஸ்க் ( 38), ஓல்ட் மேரி (35), 6வது தம்பி, 5 வயது தங்கை , மற்றும் 6 வயது தம்பியை அந்த குடும்பத்தைச் சேர்ந்த 14வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளான்.  பின்னர் போலீஸார் அவனிடம் விசாரிக்கையில் அவன் முன்னுக்கு பின் முரண்படாக பதில் சொன்னதால் அவனிடம் விசாரித்தனர். அதில் 5 பேரையும் கொன்றதையும் ஒப்புக்கொண்டான். இந்நிலையில் சிறார் சீர்சிறுத்த மையத்தில் அந்த சிறுவனை சேர்ந்துள்ளனர். இதுகுறித்து மேலும் விசாரித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்