விண்வெளியில் நடக்கும் அமெரிக்க வீரர்கள் .. எப்போது தெரியுமா ?

புதன், 10 ஜூலை 2019 (15:48 IST)
அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெணி ஆராய்ச்சி மையம்தான் உலகில் உள்ள தலைசிறந்த விண்வெளி ஆய்வு மையமாக உள்ளது. கடந்த 1969 ஆம் ஆண்டு விண்வெளிக்கு ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி உலகையே பிரமிக்க வைத்தது.
இதனையடுத்து, இன்னும் மற்ற உலக நாடுகள் அந்த சாதனையைச் செய்ய முயன்றுவருகின்றனர். இந்நிலையில் விண்ணில் சாம்ராஜ்ஜியம் நடத்திக்கொண்டுள்ள அமெரிக்கா, அடுத்த மாதம் 28 ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள அமெரிக்க வீரர்கள் வெளியே வந்து விண்வெளியில் நடக்கப்போகிறார்கள் என்று அறிவித்துள்ளது.
 
இந்த விண்வெளி மிதக்கும் சர்வதேச விண்வெளி மையத்தை அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து என பல நாடுகளை சேர்ந்த வீரர்கள்  அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
 
அதாவது விண்வெளி நிலையத்தில் ஏதேனும் பழுதுகள் ஏற்படும் போதும் ,அதனுள் பொருட்களை மாற்றி அமைக்கும் போதும் அதனுள் இருக்கும் வீரர்கள் வெளியே வந்து விண்வெளியில் நடப்பது வாடிக்கை. பீன்னர் அதற்கான பணிகளை செய்துவிட்டு மீண்டு விண்வெளி நிலையத்துக்குள் சென்றுவிடுவார்கள். இந்நிலையில் அடுத்த மாதம் 28 ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள அமெரிக்க வீரர்கள் வெளியே வந்து விண்வெளியில் நடக்கப்போகிறார்கள் என்று அறிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்