இந்தோனேஷியாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 14 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் வரும் 20ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நாங்கர்ஹரில் சுயேட்சை வேட்பாளர் அப்துல் நாசர் முகமது என்பவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 14 அப்பாவி மக்கள் உடல் சிதறி பலியாகினர். 40 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.