திருவாரூரில் அழகிரி போட்டியிட்டால்? - ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்

வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (12:50 IST)
திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் யார் போட்டியிடப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 
தன்னை திமுகவில் இணைக்க வேண்டும் என அழகிரி தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், திமுக செயல்தலைவர் ஸ்டாலினோ மௌனம் சாதித்து வருகிறார். இதனால் கோபமடைந்த அழகிரி, சமீபத்தில் சென்னையில் பேரணியையும் நடத்திக் காட்டினார். ஆனால், ஸ்டாலின் கண்டுகொள்வது மாதிரி தெரியவில்லை.
 
அதேபோல், திருவாரூர் தொகுதியில் சுயேட்சையாக அழகிரி போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அந்த எண்ணம் இல்லை என அழகிரி மறுக்கவில்லை. மாறாக, தேர்தல் வரும் போது அதுபற்றி யோசிப்பேன் எனவே கூறினார். 
 
எனவே, ஒருவேளை அவர் அப்படி போட்டியிட்டால் அது சிக்கலை ஏற்படுத்தும் என கருதும் ஸ்டாலின் அதற்காக ஒரு மாஸ்டர் பிளானை வைத்திருக்கிறாராம். அதாவது, திருவாரூர் இடைத்தேர்தலில் கருணாநிதியின் மகள் செல்வியை அவர் களம் இறக்கவுள்ளாராம். எனவே, தங்கை செல்வி மீது அதிக பாசம் வைத்திருக்கும் அழகிரி தங்கையை எதிர்த்து தேர்தல் நிற்க மாட்டார் என்பது ஸ்டாலினின் கணக்கு... 
 
எனவே, திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் போது தமிழக அரசியலில் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்