கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆதரவு ஹமாஸ் அமைப்பு ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்கியதுடன், எல்லைக்குள் புகுந்து பலரை கொன்று, சிலரை பிணைக்கைதியாகவும் பிடித்து சென்றுள்ளது. இதற்கு பதிலடியாக தற்போது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸின் பதுங்கு பகுதியான காசா முனை மீது வான்வழி, தரை வழி தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதிகள், கமாண்டர்களை அழித்து ஹமாஸை நிர்மூலமாக்குவதை குறியாக கொண்டு இஸ்ரேல் செயல்பட்டு வரும் நிலையில் அப்பாவி பாலஸ்தீன மக்கள் பலரும் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளனர். முன்னதாக ஹமாஸின் முக்கியமான 3 தளபதிகள் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.