மகளிர் தின ஸ்பெஷல்: வாழ்வில் வெற்றிக்கண்ட பெண்கள் !!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (10:37 IST)
பெண்கள் தினம் இப்போது கொண்டாட்டமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப் படுகிறது. அப்படியான மகளிர் தினம் அதன் முழுமை பயனை பெற்று விட்டதா? உடனே ஆம் என்ற பதில் கிடைப்பதில்லை என்பதே உண்மை.

எப்படி எல்லா இடங்களிலும் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறதோ அதேபோல, ஒரு சில துறைகளில் மட்டும் பெண்கள் சாதிப்பதை வைத்துக்கொண்டு பெண்கள்  முன்னேறிவிட்டார்கள், நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள், பெண்கள் சமத்துவத்தை அனுபவித்து வருகிறார்கள் என்று கூறிவிட முடியாது.
 
பெண்களுக்கான சமூக நீதியை பெறுவதற்கு உலகம் முழுவதும் உள்ள பெண்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் போராடியே வந்திருக்கிறார்கள். சம ஊதியம் பெறுவதற்கு, ஓட்டுப் போதுவதற்கு, குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்கு, கருகலைப்பு செய்து கொள்வதற்கு எனப் போராட்டங்கள் இன்றைக்கும் தொடர்ந்து கொண்டே  தான் இருக்கின்றன ஒரு புறம்.
 
மறுபுறம் பேச்சுரிமை, கல்வி, வேலை, சம ஊதியம், சொத்தில் உரிமை, குடும்பத்தில் சம மரியாதை, பொது இடங்களில் பாதுகாப்பு என அனைத்தையும் வைத்துத்  தான் பெண்களின் சமவாய்ப்பை பற்றி அளவிட வேண்டும். பெண்கள் குறிப்பிட்ட சதவீதத்தில் தங்களது வெற்றியை நோக்கி நகர்ந்து வருகின்றனர் என்பதும்  உண்மைதான்.
 
தோல்விகளை கண்டு துவண்டு விடாது அதனை எதிர்கொண்ட வாழ்வில் வெற்றிக்கண்ட பல பெண்கள் நம் மத்தியில் வாழ்கின்றர். அவ்வாறான பெண்களுக்கு மட்டுமன்றி அனைத்துலக பெண்களுக்கும், இன்றைய நாளில் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் ஒப்பற்ற மகிழ்ச்சி அடைகிறோம். மகளிர் தின வாழ்த்திக்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்