பெண்கள் குறித்து ஆண்கள் அறியாத பல ரகசியங்கள் உண்டு. பெண்ணின் மன ஆழத்தை யாராலும் அறிய முடியாது என்று கூறுவார்கள். அந்த வகையில் ஆண்களுக்கு தெரியாத ஒன்று பெண்கள் தலையணையை எது எதற்கெல்லாம் பயன்படுத்துவார்கள் என்பதுதான். அதை தெரிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்
1. கணவன் அல்லது காதலனை வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காக பிரிந்து வாழும் பெண்கள் தலையணையை தங்கள் துணைவனாக நினைத்து வாழ்வார்கள். அதை கட்டிப்பிடிப்பதன் மூலம் தங்களது அன்புக்குரியவர்களை கட்டிப்பிடிப்பது போன்று அவர்கள் உணர்வார்கள்
2. தனிமையில் இருக்கும்போது பெண்களுக்கு தலையணையுடன் பேசும் வழக்கமும் உண்டு. கணவரிடம் சொல்ல முடியாத சில ரகசியங்களை பெண்கள் தலையணையிடம் கூறுவார்கள்
3. மகிழ்ச்சி அடைந்தாலும், துக்கம் வந்தாலும் பெண்கள் முதலில் செய்வது தலையணையை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள் அல்லது கதறி அழுவார்கள்
4. டிவி பார்க்கும்போதும், செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போதும் பெரும்பாலான பெண்கள் தலையணையை மடியில் வைத்திருப்பதை ஒரு பழக்கமாக கொண்டிருப்பார்கள்
5. தலையணையை பெரும்பாலான பெண்கள் ஒரு டெட்டி பியர் பொம்மையை போல் நினைத்து கொள்வதும் உண்டு. கணவர் அல்லது காதலரை அடுத்து பெண்கள் வாழ்வில் விருப்பத்திற்குரிய இடம் தலையணைக்குத்தான்.