அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து ரவையை நல்ல பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
நன்றாக ஆறிய பின் ரவையை மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும். சர்க்கரை, முந்திரிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும். வறுத்த தேங்காய் துருவலை தனியாக மிக்ஸ்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பின்னர் பொடித்த ரவை, சர்க்கரை, முந்திரிபருப்பு, தேங்காய் துருவல் மீதமுள்ள ஒரு மேஜைக்கரண்டி நெய் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கி
வைக்கவும். லட்டு பிடிக்கும் பதத்திற்கு காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும். பிறகு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். சுவையான ரவா லட்டு தயார்.