இந்த நிறுவனங்களின் காபி தூள் ஆபத்தானவையா? – உணவு பாதுகாப்புத்துறை அறிக்கையால் அதிர்ச்சி!

Prasanth Karthick

வியாழன், 30 மே 2024 (15:42 IST)
தமிழகத்தில் பிரபலமாக உள்ள இரண்டு காபி தூள் நிறுவனங்களின் காபி பொடியில் ஆபத்தான அளவில் ரசாயனம் இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அறிக்கை அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தமிழ்நாட்டில் பல்வேறு விதமான காபி பொடிகள் சந்தையில் விற்பனைக்கு உள்ளன. அவற்றில் லியோ காபி மற்றும் எவரெஸ்ட் காபி பொடிகளும் பிரபலமானவை. இந்நிலையில் கடந்த மார்ச் 26ம் தேதி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் லியோ மற்றும் எவரெஸ்ட் காபி தூள் தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு செய்ததுடன், காபி மாதிரிகளையும் ஆய்வு செய்தனர்.

இந்த காபி பொடிகளை ஆய்வு செய்தபின் அவை உணவாக எடுக்க ஆபத்தானவை என உணவு பாதுகாப்புத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாக காபி பொடியில் காப்பர் சல்பைடு என்ற வேதியியல் பொருள் 30 மி.கி வரை இருக்க வேண்டும் என்றும், ஆனால் பரிசோதிக்கப்பட்ட காபி பொடியில் இது 46.18 கிராமாக உள்ளதாகவும் இது ஆபத்தான அளவாகும் என்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள லியோ, எவெரெஸ்ட் காபி நிறுவனங்கள், செயற்கையாக காபி பொடியில் வேதியியல் பொருட்களை சேர்க்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறியுள்ளன. இந்த சம்பவம் காபி பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்