முதலில் புளிச்ச கீரையை நன்கு சுத்தம் செய்து, நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், புளிச்ச கீரையை சேர்த்து 4-5 நிமிடம் மென்மையாகும் வரை வதக்கி இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், மல்லி, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, அதனையும் குளிர வைக்க வேண்டும். பின்பு மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள பொருட்களுடன், புளிச்ச கீரை, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பின் அதில் வரமிளகாய், தட்டி வைத்துள்ள பூண்டு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சட்னி தயார்.