எளிதான முறையில் அரிசி முறுக்கு செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
புழுங்கல் அரிசி - 2 கிலோ
கடலை மாவு - 500 கிராம்
பொட்டுக்கடலை - 500 கிராம் (அரைத்து வைக்க)
எள்ளு - தேவையான அளவு
ஓமம் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - தேவையான அளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - தேவையான அளவு

செய்முறை:
 
அரிசியை ஊற வைத்து, அரைத்துக்கொள்ள வேண்டும், அதனுடன் கடலை மாவு, அரைத்து வைத்த பொட்டுக்கடலை சேர்த்து கலக்க வேண்டும். மிளகாய், சீரகம், உப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அரிசி மாவுடன் அவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
 
அதனுடன் தேவையான அளவு எள்ளு, ஓமம் (கைகளில் அழுத்தி தேய்த்தது)  சேர்த்து கலக்க வேண்டும். வெண்ணெய் சேர்த்து சிறிது நேரம் கலக்கினால்  போதுமானது.
 
கடாயில் எண்ணெய் காயவைத்து முறுக்கு பிழியும் (முறுக்கு பிடியில்) சுற்றி எடுத்துக்கொண்டு பொறிக்கலாம். பக்குவாமாக சராசரி சூட்டில் (அடுப்பு நெருப்பில்)  மொறுமொருப்பான, சுவையான அரிசி முறுக்கு தயார் செய்யலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்