சுவையான திணை அரிசி காய்கறி உப்புமா செய்வது எவ்வாறு....

Webdunia
தேவையான பொருட்கள்:
 
திணை அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1 கைப்பிடி
மிளகு, சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
காரட், பீன்ஸ், பட்டாணி - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கீற்று
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

 
 
செய்முறை: 
 
* வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
* துவரம் பருப்பை கரகரப்பாக பொடித்து கொள்ளவும். திணைஅரிசியோடு கரகரப்பாக பொடித்த துவரம் பருப்பையும், மிளகு சீரகத் தூளையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
 
* கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். அடுத்து அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, காய்கறிகளை போட்டு வதக்கி உப்பு சேர்த்து 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.
 
* தண்ணீர் கொதிக்கும்போது திணை அரிசி, துவரம்பருப்பு, மிளகு சீரகப் பொடியைச் சேர்த்துக் கிளறி வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்க்கவும். சுவையான திணை அரிசி காய்கறி உப்புமா தயார்.
அடுத்த கட்டுரையில்