வேர்கடலையை ஊறவைத்து தேங்காய் துருவலுடன் அரைத்துகொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் ஊரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
முளைகட்டிய காராமணியைக் குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவிடவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டுத் தாளித்து, அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி அதனுடன் தக்காளி, வேகவைத்த காராமணி சேர்த்துக் கொதிக்கவிடவும்.
அரைத்த வேர்க்கடலை விழுது, உப்பு, பெருங்காய தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் 5 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். இது பூரி, சப்பாத்தி, புல்கா, ரொட்டிக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.