மாங்காய் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதித்ததும் வெல்லத்தை சேர்த்து பாகு செய்து வடிகட்டி வைத்து கொள்ளவும்.
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, மிளகாய் தூள், கறிவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய மாங்காய் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும். அதனுடன் சிறிது உப்பு சேர்க்கவும்.
மாங்காய் முக்கால் பாகம் வெந்தவுடன் பாகு செய்த வைத்துள்ள வெல்லதை சேர்க்கவும். வெல்லம் கரைந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.