பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். சோள மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து, நீர் விட்டு கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கை மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து வெந்ததும் தோல் நீக்கி மசித்து கொள்ளவும். வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கேரட் துருவல் சேர்த்து, வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சேர்த்து மேலும் வதக்கி, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.