பாசுமதி அரிசி - ஒரு கப்
பச்சைப் பட்டாணி - 1/2 கப்
கேரட் - 1
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 6 பல்
பெரிய வெங்காயம் - 2
பட்டை, கிராம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் , நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், பச்சைமிளகாயை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.
கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரிசியைக் கழுவி வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்புத்தூள் போட்டு வெடித்த பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிவக்க விடவும். அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கவும்.
இத்துடன் அரிசி சேர்த்துக் கிளறி, அரிசி சற்று வறுபட்டதும் குக்கருக்கு மாற்றி 2 கப் தண்ணீர் (அரிசி ஒரு கப் எனில் தண்ணீர் 2 கப்) ஊற்றி மூடி இரண்டு விசில் வந்ததும் அடுப்பை நிறுத்திவிட வேண்டும். சுவையான பட்டாணி புலாவ் தயார். இதனை தக்காளி குருமா மற்றும் வெங்காய தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்.