சுவையான வெஜிடபிள் பிரியாணி செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்
 
பாஸ்மதி அரிசி - 2 கப் (வேக வைத்தது)
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிப்ளவர் - 1 கப்
பச்சை மிளகாய் - 3
மிளகாய் துாள் - 1 டீ ஸ்பூன்
தனியாத்துாள் - 1 டீ ஸ்பூன்
பாவ் பஜ்ஜி மசாலா - 2 டீ ஸ்பூன்
மஞ்சள் துாள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
சீரகத் துாள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:
 
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதில், கேரட், பீன்ஸ்,  காலிப்ளவர், உருளைக்கிழங்கு ஆகியவை சேர்த்து ஒரு கப் அளவு இருக்க வேண்டும். 
 
மொத்தத்தையும், இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அதன்பின், சீரகத் துாள், மஞ்சள் துாள், பாவ் பாஜி மசாலா, மிளகாய் துாள், கொத்தமல்லி துாள் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை, நன்கு வதக்க வேண்டும்.

அதன்பின், வேகவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மூடி போட்டு, 10  நிமிடங்கள் வெந்ததும், அடுப்பை அணைத்து நறுக்கிய கொத்தமல்லி தழையைத் துாவி பரிமாறவும். சுவையான வெஜிடபிள் பிரியாணி தயார். விரைவாக, சுலபமாக  செய்யலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்