சுவையான கத்திரிக்காய் சட்னி செய்ய !!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (15:59 IST)
தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 6
உருளைக்கிழங்கு - 1
சமையல் எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு -  அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 15
பூண்டு பற்கள் - 20
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிதளவு



செய்முறை:

ஒரு பிரஷர் குக்கரில் 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய்  சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு,  அரை தேக்கரண்டி சீரகம்,  சிறிதளவு கறிவேப்பிலை, 3  பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

அதனுடன் 15  சின்ன வெங்காயம், 20  பல் பூண்டு ஆகியவற்றை சேர்த்து மென்மையாக வதக்கவும். அதனுடன் 1  தக்காளியை நறுக்கி சேர்த்து கொள்ளவும்,  தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.

பின்னர் அரை தேக்கரண்டி மஞ்சள்தூள், 1  தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும். மிளகாய் தூள் பச்சை வாசனை போக வதக்கி பின்னர், 1  உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

கத்தரிக்காய்களை நீளவாக்கில் நறுக்கி சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் சேர்த்துக் கொள்ளவும். ஓரளவு வதங்கிய பின்னர்,  தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரை மூடி 2 விசில் வேக வைக்கவும். பிரஷர் ரிலீஸ் ஆனதும்,  குக்கரை திறந்து கரண்டி அல்லது மத்து வைத்து மசித்து விடவும்.

கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான கத்தரிக்காய் சட்னி தயார். இந்த கத்தரிக்காய்  சட்னி  இட்லி,  தோசை,  சப்பாத்தி,  மற்றும் தயிர் சாதத்துடன் சுவையாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்