சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கத்தரிக்காய் -1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
புளிக்குழம்பு பொடி - 4 தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி (சிறியது)
புளி தண்ணீர் - 2 கப்
பூண்டு - 10 பல்
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: 
 
முதலில் பூண்டை தட்டி வைத்து கொள்ளவும். பின்பு கத்தரிக்காய்களை மேல் பகுதியில் கீறலாக கீறி கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி  வெட்டாத வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கி கொள்ளவும்.
 
வதக்கியதை ஆறவிட்டு தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். பிறகு கத்தரிக்காயில் லேசாக எண்ணெய் விட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு  வதக்கவேண்டும்.
 
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளிக்கவும். பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை, தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும் பின்னர் அரைத்து  வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும். இதனுடன் குழம்பு பொடி சேர்த்து ளறவும்.

அடுத்து புளி கரைசல் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்க விடவும். குழம்பு கொதித்ததும் கத்தரிக்காய்களை சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் மேலாக பிரிந்து வந்ததும் இறக்கவும். சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு  தயார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்