* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். அவலை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்த பின் தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவல், மசித்த உருளைக்கிழங்கு, கரம்மசாலா தூள், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தயிர், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.
* கடாயை அடுப்பில் வைத்து பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை போண்டா சைஸில் உருட்டி, சூடான எண்ணெயில், போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அதிகம் சிவந்து விடாமல் பொரித்தெடுக்கவும். சுவையான அவல் போண்டா தயார்.