ஒரு கடாயில் “அரைப்பதற்கு” கீழ் உள்ள பொருட்கள் எண்ணெய் சேர்த்து வறத்து, அவைகளை நன்கு பேஸ்டாகும் வரை அரைக்கவும். அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய் கொண்டு கறிவேப்பிலை, கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர் நறுக்கப்பட்ட சிறிய வெங்காயம் சேர்த்து நன்கு சமைக்கவும். இப்பொது சிறிது உப்பு மற்றும் மஞ்சளை சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு தக்காளியுடன் சிறிது உப்பை சேர்த்து நன்றாக மசியும்வரை சமைக்கவும். இப்போது அரைத்த மசாலாக்களை சேர்த்து மீதமான சூட்டில் கலக்கவும். உப்பை சரிபார்த்து சிறிது தண்ணீர் சேர்த்து குழம்பு நிலைக்கு கொண்டுவரவும்.
இறுதியாக வேகவைத்த கடலையை சேர்த்து நன்றாக சமைக்கவும், சமைத்தபின் நறுக்கி வைத்துள்ள கொத்துமல்லியை சேர்த்து அழகுபடுத்தவும். சுவையான கொண்டை கடலை குழம்பு தயார்.