வேப்பம்பூ ரசம் செய்வது எப்படி...

Webdunia
தேவையானவை:
 
புளி - எலுமிச்சம் பழம் அளவு
மிளகு -- 1/2 டீஸ்பூன்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
பெருங்காயம் -- 1/2 டீஸ்பூன்
எண்ணைய் -- 1 ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
மிளகாய் வத்தல் -- 3 என்னம்
வெந்தயப் பொடி -- 1/2 டீஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
தக்காளி -- 2 பிசைந்து கரைத்தத
கொத்தமல்லி -- 1 டேபிள்ஸ்பூன்
வேப்பம்பூ -- 1 ஸ்பூன் வறுத்தது

 
செய்முறை:
 
வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வத்தல், கறிவேப்பிலை மிளகு, சீரகம் அரைத்தது தாளித்து  அதில் வெந்தயப்பொடி, பெருங்காயம் போட்டு புளித்தண்ணீரை ஊற்றவும். அதனுடன், உப்பு, கரைத்த தக்காளி இவற்றை  போட்டு நுரை ததும்பி வறும் போது அடுப்பை நிறுத்தவும்.
 
நிறுத்தும் முன் கொத்தமல்லி, வேப்பம் பூவை இலேசாக வறுத்து இதனுடன் சேர்த்து இறக்கவும். சுவையான மருத்துவ குணம்  நிறைந்த வேப்பம்பூ ரசம் தயார்.
அடுத்த கட்டுரையில்