மீல் மேக்கர் மஷ்ரூம் பிரியாணி செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பாஸ்மதி அரிசி  - 1 1/2 கப்
பட்டன் மஷ்ரூம் - 200 கிராம்
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 4 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
தக்காளி - 1
எண்ணெய், நெய்  - 4 டேபிள்ஸ்பூன்
மீல் மேக்கர் - 20 உருண்டைகள்
புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை - கொஞ்சம்
பிரியாணி மசாலா - 1 1/2 டேபிள்ஸ்பூன்
தயிர் -  2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
பொடிக்க தேவையான பொருள்கள்:
 
இஞ்சி - சிறுதுண்டு, பூண்டு - 5 பல், பட்டை - 3 துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - 1, பிரியாணி இலை - 1 இந்த பொருள்கள் அனைத்தையும்  ஒன்றாக பொடி செய்து கொள்ளவேண்டும்.
செய்முறை:
 
* பாஸ்மதி அரிசியைக் களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி  வைத்துக்கொள்ளவும். மீல்மேக்கரை கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கள் போட்டு பிரகு குளிர்ந்த நீரில் அலசி பிழிந்து வைக்கவும்.
 
* காளானை சுத்தம் செய்து இரண்டாக நறுக்கி இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள், பிரியாணி மசாலா, தயிர், பொடித்த  மசாலா, உப்பு, கொஞ்சம் புதினா இலைகள் எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடங்கள் வைக்கவும்.
* குக்கரில் எண்ணெய் ஊற்றி காயவைத்து வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, தக்காளியை போட்டு நன்கு வதக்கி,  ஊறவைத்த மஷ்ரூம் - மீல்மேக்கர் கலவை, மீதியிருக்கும் புதினா மற்றும் கறிவேப்பிலை புதினாவைச் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில்  ஊறவைத்த அரிசியை சேர்த்து 2 1/2 கப் தண்ணீர் விட்டு உப்பு அளவை சரிபார்த்து குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும். சுவையான  மீல் மேக்கர் மஷ்ரூம் பிரியாணி தயார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்