கொண்டைக் கடலை வடை செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கருப்பு அல்லது வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப்
சின்ன வெங்காயம் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி - சிறிது
பூண்டு - 2
பெருஞ்சீரகம் - 1
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
 
கொண்டைக் கடலையை முதல் நாளிரவே ஊற வைது நீரை வடித்து, மிக்ஸியில் அரைத்து அதனுடன் மிளகாய், இஞ்சி, பூண்டு, பெருஞ்சீரகம்  எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல், இரண்டுமூன்று தடவை மிக்ஸியை நிறுத்தி நிறுத்தி தள்ளிவிட்டு அரைக்கவும்.
அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை & கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசையவும். உப்பு,  காரம் சரிபார்த்துக் கொள்ளவும். காரம் தேவையெனில் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிப்போட்டு சேர்த்துக் கொள்ள‌வும்.
 
ஒரு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மேலே படத்தில் உள்ளவாறு வடைகள் மாதிரியோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிப்போட்டு பகோடா மாதிரியோ எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
 
இது கடலைப் பருப்பு வடையைவிட மென்மையாகவும், சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருந்தது. தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவை  கூடும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்