தீபாவளி ஸ்பெஷல்: ருசியான வரகு சீப்பு சீடை செய்ய !!

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (15:20 IST)
தேவையான பொருட்கள்:

வரகு அரிசி மாவு - 1 கப்
உளுத்தம் மாவு - கால் கப்
கடலை மாவு - கால் கப்
தேங்காய்ப்பால் - கால் கப்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை:

ஒரு பாத்திரத்தில் வரகு அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும். பின்னர் தேங்காய்ப்பாலை லேசாக சூடு செய்து, கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஊற்றி நன்கு  பிசைந்துகொள்ள வேண்டும்.

முறுக்கு சீடை சீப்பு சீடைக்கான அச்சைப் போட்டு மாவை உள்ளே வைத்து ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் பிழிந்துவிடவும். பிழிந்த மாவை சிறியதாக கட் செய்து, கட் செய்தவற்றின் இரண்டு ஓரங்களையும் ஒட்டிவிட வேண்டும். பார்ப்பதற்கு சின்ன குழல் போல இருக்கும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்துவைத்த சீப்பு சீடைகளைப் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும். ருசியான வரகு சீப்பு சீடை தயார்.

Edited by Sasikala

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்