வாஸ்து: புது வீடு கட்ட பூமி பூஜை அவசியமா...?

Webdunia
குடியிருக்கும் மனையானது நமது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவதே இந்த மாற்றத்துக்குக் காரணமாகும். குடியிருக்கப் போகும் மனையின் அமைப்பைத் தீர்மானிப்பது வாஸ்து சாஸ்திரம். 
வாஸ்து நாள் வருடத்தில் 8 நாள்கள் மட்டுமே வருகிறது. கும்பகர்ணனைப் போல எப்போதும் தூங்கிக்கொண்டிருக்கும் வாஸ்து புருஷன் கண் விழிக்கும் நேரமே வாஸ்து நாள் என்று சொல்லப்படுகிறது. புது வீடு கட்ட அன்றுதான் நாம் பூமி பூஜை செய்கிறோம்.
 
வாஸ்து புருஷன் என்பவர் யார், அவர் ஏன் எப்போதும் தூங்கிக் கொண்டிருக்கிறார், வாஸ்து நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் பூமி பூஜை போடலாமா, போன்ற பல்வேறு சந்தேகங்கள் நமக்கு ஏற்படக்கூடும். நம்முடைய சந்தேகங்களைத் தெளிவு படுத்துகிறார் சென்னை வாஸ்து  நிபுணர் ஜெகன்னாதன்.
“வாஸ்து என்றால், பொருள்கள் அதாவது வஸ்துக்கள் இருக்கும் இடம் என்று பொருள். வாஸ்து முறைப்படி வஸ்துக்களை அமைத்தால்  வாஸ்து புருஷனின் ஆசிகள் பெற்று வளமோடு வாழலாம். மனிதன் ஏற்படுத்திக்கொண்ட வசதி வாய்ப்புகளை இயற்கைச் சக்திகளோடு  ஒருங்கிணைக்கும் ஓர் அறிவியல்தான் `வாஸ்து’ சாஸ்திரம். ஐம்புலன்களால் அறியக்கூடியதும் அறிய முடியாததுமான இயற்கை  சக்திகளை,  மனித வாழ்வுக்குப் பயன்படும் வகையில் அமைத்துக் கொள்வதே வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படைக் குறிக்கோள்.
 
பூமி பூஜை:
 
வாஸ்து பகவான் கண் விழிக்கும் நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் பூமி பூஜை போடலாம் என்று அனைவரும் கருதுகிறார்கள். ஆனால்,  இது தவறு. வாஸ்து நேரத்தில் மற்ற கிரகப் பலன்களையும் பார்த்து, நல்ல நேரமாக இருந்தால் மட்டுமே பூமி பூஜையைச் செய்ய வேண்டும். பூஜை செய்வதற்கு உகந்த நேரம். நேரத்தில் பூமி பூஜை செய்தால் வாஸ்து புருஷன் மற்றும் பஞ்ச பூதங்களின் அருள் பெற்று, சகல வசதிகளையும் பெற்று சிறப்புற வாழலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்