படிக்கட்டு அமைப்பதில் என்ன வாஸ்து உள்ளது தெரிந்துக்கொள்வோம் !!

Webdunia
வீடு கட்டுவதற்கு சிலர் வாஸ்து அறிஞர்களிடம் கேட்டு தமது வீட்டை கட்டமைக்கும் பொழுது மூல வாயில், படுக்கையறை, அடுப்படி அமைத்தல், கழிவறைகள்  அமைத்தல்,சாளரங்கள் அமைத்தல், தண்ணீர் தொட்டிகள் அமைத்தல் மற்றும் பிற வீட்டு அமைப்புகள் குறித்து கலந்து அறிந்து கொண்டு வீட்டை கட்டுகின்றனர்.

படிக்கட்டை இரும்பு, மரம், காங்க்ரீட் என எந்த பொருள் கொண்டு வேண்டுமானாலும் கட்டலாம். படிக்கட்டை கட்டும்பொழுது வீட்டின் தென் மூலை அல்லது மேற்கு மூலையிலிருந்து மேலெழும்ப கட்டுவது சிறப்பு.
 
தெற்குப் பகுதியில் இருந்து மேலெழும்புகிறது என்றால் கிழக்கு நோக்கி அமைந்தால் சிறப்பு. அல்லது தெற்கில் இருந்து மேலெழும்பி மேற்கு நோக்கி அமைந்தாலும்  சிறப்பு. ஆனால் வடகிழக்கு மூலையில் அமையப்பெற்ற படிக்கட்டு பொருளாதார இழப்பையும் தன்மான இழப்பையும் ஏற்படுத்தும்.
 
படிகட்டிற்கான திசையை கவனிக்கும் பொழுது படிகளின் எண்ணிக்கையிலும் கவனம் செலுத்த வேண்டும். என்றுமே படிக்கட்டு ஒற்றைப்படையில் முடிவதாக  இருக்க வேண்டும். 5, 11, 17 ஆகிய எண்கள் சிறப்புடையவை.
 
படிக்கட்டின் நிறம் என்றும் கருப்பாக இருக்க வேண்டாம். சிவப்பு நிறமும் ஏற்புடையது அல்ல. படிக்கட்டு என்றும் சிதையாத நிலையில் இருக்குமாறு பார்த்துக்  கொள்ளுங்கள்.
 
வீட்டின் உள் படிக்கட்டு அமைப்பதாக இருப்பின் வீட்டின் நட்ட நடு நடுவில் அது அமையாமல் இருக்கட்டும். படி கட்டானது அடுக்களை, சாமி அறை ஆகியவற்றின்  வாயில்களில் இருந்து துவங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
 
படிக்கட்டு கீழே கழிவறை அல்லது சமயல் அறை அமைக்காதீர்கள். கீழுள்ள பகுதியை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அதை ஒரு பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்காக பயன்படுத்தலாம்.
 
வீட்டின் மாடிப் பகுதியில் இருந்து கீழே இறங்கும் படிகட்டானது, தரை தளத்திற்கும் கீழே ஒரு தளம் இருக்குமேயானால், அந்த தளத்திற்கு தொடர்ச்சியாக இந்தப்  படிக்கட்டு அமைப்பு இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். படிக்கட்டு சுழன்று சுழன்று மேலே செல்லாமல் இருக்கட்டும். அப்படி அமைத்தால் நோய்நொடிகள் வந்து  சேரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்