வீட்டின் பிரதான நுழைவாசலில் அமையும் மெயின் கதவு, வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளை நோக்கி அமைந்திருக்கவேண்டும். இந்த மெயின் வாசல் நுழைவாயில் கதவு, வீட்டின் ஏனைய கதவுகளைவிட அளவில் சற்றுப் பெரியதாக இருக்கவேண்டும்.
வீட்டின் பிரதான நுழைவாயில் வீட்டின் பின்பக்க வாசலை நோக்கியபடி எதிரும் புதிருமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், வீட்டின் சக்தியானது பின்வாசல் வழியாக வெளியேறிவிடும். வீட்டுக்குள் சுழன்று நற்பயன் விளைவிக்கக்கூடிய நல்ல சக்தி வெளியேறி விடுவது வீட்டுக்கு நல்லதல்ல. எனவே பிரதான வாசல் கதவுக்கு நேரெதிராக பின் வாசல் கதவு இருக்கும்படி அமைக்கக்கூடாது.
உங்கள் வீட்டு பிரதான வாசலுக்கு எதிராக மரமோ, கிணறோ இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அதுவும் உங்கள் வீட்டுக்குள் நேர்மறை சக்தியை நுழைய விடாமல் தடுக்கும்.
வாசல் கதவு, மற்றுமுள்ள கதவுகள், ஜன்னல் கதவுகள் முதலியவற்றைத் திறக்கும்போது, சத்தம் எழுப்பக்கூடாது. குறிப்பாக பிரதான வாயில் கதவில் இந்த சத்தம் அறவே வரக்கூடாது.
பிரதான வாயில் கதவு நல்ல, உயர்வகை மரத்தாலானதாக இருக்கவேண்டும். அதோடு, மற்ற கதவுகளை விட இந்த மெயின் டோர் சற்றுப் பெரியதாகவும் இருக்கவேண்டும். நல்லவேலைப்பாட்டுடனும், நல்ல டிஸைனுடனும் இருக்கவேண்டும். மிக அழகாகப் பெயிண்டிங் செய்யப்பட்டு மற்ற கதவுகளை விட பளிச்சென்று இருக்கவேண்டும்.