சமையலை சுவையானதாகவும் எளிதாகவும் செய்ய சில டிப்ஸ்...!

Webdunia
முள்ளங்கி இலையைக் தூக்கிப் போடாமல், சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தை வறுத்து சேர்த்து துவையல் அரைத்துப் பாருங்கள். சுவை அசத்தலாக இருக்கும். சத்தும் அதிகம். உடம்புக்கும் நல்லது.
 
புதினா சட்னிக்கு பிடி வேர்க்கடலையும் சேர்த்துச் செய்தால் ருசி கூடும். சத்தும் நிறைந்தது. பருப்பு, பயறு வேகவைக்கும்போது குக்கரைப் பயன்படுத்தினால் வைட்டமின்கள் வீணாகாமல் அப்படியே நமக்குக் கிடைக்கும்.
 
காலையில் செய்த கூட்டு மீந்துவிட்டதா? சிறிது பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்துக் கூட்டைக் கொதிக்கவிட்டு இறக்கினால்,  மாலை டிபனுக்குக் குருமா ரெடி. புளிப்பு அதிகம் வேண்டுமானால் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கொள்ளவும்.
 
பருப்பு வகைகளை வேகவைக்கும்போது, சிறிதளவு கடலை எண்ணெய் அல்லது பூண்டு போட்டு வேக வைத்தால் பருப்பு சீக்கிரமே  வெந்துவிடும்.
 
சாம்பார் செய்ய அல்லது வேறு ஏதாவது சமையல் செய்ய துவரம் பருப்பு வேகவைக்கும்போது, ஒரு பிடி கொள்ளையும் போட்டு  வேகவைத்தால் உடம்புக்கு நல்லது.
 
மசாலா பொடிக்கு மிளகாயை வறுக்குபோது அதோடு ஒரு பிடி நிலக்கடலையைச் சேர்த்து கொள்ளுங்கள். நல்ல சுவையுடன் இருக்கும். கறிவகைகள் செய்யும்போது இந்தப் போடியை மேலாகத் தூவினால் மிகவும் சுவையாக இருக்கும்.
 
கூட்டு, பொரியல் குழம்பு வைக்கும்போது அவசியம் ஜீரகம் போட்டு தாளிக்கவும். குழம்பு வாசனையாக இருப்பதுடன் சாப்பாடு எளிதில் ஜீரணம்  ஆகிவிடும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்