முகம் பளபளவென்று பிரகாசமாகப் பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள்...!

Webdunia
நெல்லிக்காய்களின் கொட்டைகளை எடுத்துவிட்டு எலுமிச்சம் பழச்சாறு விட்டு அம்மியில் வைத்து அரைத்து, மாதம் ஒரு தடவை தலையில் தேய்த்துக் குளித்து வந்தால், முடி உதிர்வது நின்றுவிடும். இளநரை இருந்தாலும், சில நாட்களில் மறைய ஆரம்பிக்கும்.
கடலைமாவை எலுமிச்சம் பழச்சாறில் குழைத்து சோப்புக்கு பதில் உபயோகிக்கலாம். இதேபோன்று, கோதுமைத் தவிட்டையும் உபயோகிக்கலாம். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதாக உதிர்ந்து தேகம் புத்துணர்வு பெறும்.
 
வைட்டமின் ஈ மாத்திரைகளை வாங்கி, அதனுள் இருக்கும் எண்ணெய்யை எடுத்து முகச்சுருக்கங்களில் தடவி மசாஜ் செய்து வந்தால்,  சுருக்கங்கள் மறைந்து முகம் அழகாக இருக்கும்.
 
சாதம் வடித்த கஞ்சியை ஒரு கரண்டி அளவு வெதுவெதுப்புடன் எடுத்து முகத்திலும், கைகளிலும் தேய்த்துக் கொண்டு உலர்ந்தபின் கழுவிவிட்டால், தோல் மினுமினுப்பாக இருக்கும்.
 
இரவில் உஷ்ணம் வெளிப்படுவதால், தூக்கம் பாதித்து கண்களைச் சுற்றிக் கருவளையம் ஏற்படும். விளக்கெண்ணெய்யில் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி, சிறிது உப்பு ஆகியவற்றைக் கலந்து கண்களைச் சுற்றித் தடவி வந்தால் பத்தே நாளில் கருவளையம் நீங்கும்.
 
பார்லி பவுடரில் எலுமிச்சம் பழச்சாறும், பாலும் சேர்த்து முகத்தில் பூசி இருபது நிமிடம் ஊறவைத்துவிட்டு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவித் துடைத்து வந்தால், முகத்தில் வளரும் ரோமங்கள் நீங்கிவிடும்.
 
இரவில் படுக்கச் செல்வதற்கு முன் ஒரு டீஸ்பூன் தேனில் இரண்டு சொட்டு எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் பூசவும். காலை எழுந்தவுடன் கடலை மாவு குழைத்து முகத்தில் தேய்த்து அரை மணி கழித்து கழுவினால் முகம் பளபளவென்று பிரகாசமாகப் பளிச்சிடும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்