துளசி என்பது ஒரு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை. இது நம் வீட்டின் முற்றத்தில் இருக்கும் போது நமது வீடு முழுவதையும் பாதுகாக்கிறது. அதுபோல இதனை சமையல் அறையில் வைத்தால் நமது ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சமையல் அறையில் ஒரு துளசி செடியை சிறிய தொட்டியில் வளர்த்தால் மட்டும் போதும். பூச்சிகளினால் ஏற்பட கூடிய பாதிப்புகள் பறந்தோடும்.
இரண்டு கப் வினிகரை 1 ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெயுடன் 1 கப் குளிர்ந்த நீரில் கலந்து சமையல் அறையின் எல்லா மூலைகளிலும் ஸ்ப்ரே செய்து வந்தால் பூச்சிகளை எளிமையாக விரட்டி விடலாம்.
சிறிதளவு எலுமிச்சை புல் எண்ணெய்யை ஒரு கிண்ணத்தில் ஊற்றி சமையல் அறையில் ஒரு ஓரமாக வைத்து விடவும். இதே போல ஓரிரு இடங்களில் வைத்தால் பூச்சிகள், கொசு, ஈ போன்றவை அழிந்து விடும்.
நொச்சி இலையை சமையல் அறையில் ஆங்காங்கே வைத்து கொண்டால் கொசுக்கள் வராது. இந்த இலையை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மாற்றி வந்தாலே போதும்.
ஒரு ஆப்பிளில் பாதியை எடுத்து அதில் இலவங்கத்தை சொருகி பூச்சிகள் இருக்கும் இடத்தில் வைத்தால் பூச்சிகள் வரவே வராது ஓடிவிடும்.