வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்க பொதுவாக மாநில அரசுகள் பயன்படுத்தும் வியூகம் இலவசங்கள் மற்றும் மானியங்கள். ஆனால், மோடி அரசு இதற்கு முற்றிலும் எதிராக உள்ளது. சமீபத்தில், மோடிமக்கள் இலவசங்களை எதிர்பார்க்கவில்லை. நல்ல கட்டமைப்புகளை எதிர்பார்க்கின்றனர் என்றார்.
கடந்த 2014-2015 ஆம் ஆண்டில் இருந்த 15.52% சதவீத மானிய செலவினங்கள் 2017-2018 ஆம் ஆண்டில் 11.2% குறைக்கப்பட்டது. ஆனால், குஜராத் தேர்தல் முடிவுகள் பாஜக-விற்கு தோல்வி பயத்தை காட்டியுள்ள நிலையில், மானியங்களை கைவிடும் முடிவில் பாஜக இருப்பதாக தெரியவில்லை.