மாட்டிறைச்சி தடை: வாபஸ் வாங்கும் மோடி அரசு??

வியாழன், 30 நவம்பர் 2017 (16:43 IST)
நாடு முழுவதும் இறைச்சிக்காக பசு, எருமை, ஒட்டகம், காளை,  உள்ளிட்ட விலங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்நிலையில், மத்திய அரசு பிறப்பித்த இறைச்சிக்காக மாடுகள் கொல்வதை தடை செய்யும் உத்தரவு வாபஸ் பெறப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மகாராஷ்டிர அரசு மாட்டிறைச்சிக்காக பசுக்களை விற்க தடை விதித்தது. இதன் பின்னர், கடந்த மே 25 ஆம் தேதி மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் பசுக்களை மாட்டிறைச்சிக்காகக் கொல்ல தடைவிதித்தது.
 
தடை விதிக்கப்பட்ட போது மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி பலர் தாக்கப்பட்டனர். பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் நடத்திய தாக்குதல்களில் உயிரப்புகளும் ஏற்பட்டது.  
 
தற்போது, குஜராத் மற்றும் இமாச்சல் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மத்திய அரசு இந்த உத்தரவை திரும்பப் பெறுவது பற்றி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்