ஸ்டெர்லைட் ஆலையின் முதல் உலையை மூட தமிழக அரசு உத்தரவு

Webdunia
வெள்ளி, 25 மே 2018 (08:50 IST)
தூத்துகுடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த பல வருடங்களாக போராடி வந்தாலும் கடந்த மூன்று மாதங்களாக இந்த போராட்டம் தீவிரம் அடைந்தது. குறிப்பாக கடந்த மூன்று நாட்களில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், போலீசார்களின் துப்பாக்கி சூட்டுக்கு 13 பேர் வரை பலியாகியுள்ளனர்.
 
இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பை நேற்று காலை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்பேரில் மின்சார வாரியம் துண்டித்தது. மேலும் தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க வாய்ப்பு இல்லை என தூத்துகுடி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்ற சந்தீப் நந்தூரி உறுதியளித்தார்.
 
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் முதல் உலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு குறித்து கருத்து கூறிய வேதாந்தா நிறுவனம், '*அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு மார்ச் 27ஆம் தேதியில் இருந்து முதல் உலை செயல்பட வில்லை என்றும் முதல் உலையின் தற்போதைய மதிப்பு ரூ.2100 கோடி என்றும் தெரிவித்துள்ளது. 
 
எனவே தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடும் வாய்ப்பு உள்ளதால் அப்பகுதி மக்களின் போராட்டம் வெற்றி அடைந்ததாகவே கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்