கலர் மாறும் தாஜ் மஹால்: விளைவுகள் என்ன?

வியாழன், 3 மே 2018 (13:49 IST)
ஏழு அதிசயங்களின் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால் ஷாஜஹானால் அவரது மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக கட்டப்பட்ட கல்லறை மாளிகையாகும்.
 
1632 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இதன் கட்டுமானத்தை முடிப்பதற்கு 21 ஆண்டுகள் ஆனது. தாஜ் மஹாலில் சிறு தவறு கூட நேராத வகையில், கட்டிடப் பணிகளில் மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. 
 
300 ஆண்டுகளுக்கு முன்பே, தாஜ் மஹாலின் மதிப்பு 32 பில்லியன் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இது 65 பில்லியனாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
 
இதன் மெறுகேற்றும் அழகு அதன் வெள்ளை நிறம்தான். ஆனால்,  தாஜ் மஹாலின் வெள்ளை நிறம் நாளுக்குநாள் மங்கிக்கொண்டே வருகிறது. இதன் நிறம் பழுப்பாகவும் பச்சையாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில், தாஜ் மஹாலின் வெள்ளை நிரம் மாறாமல் இருக்க அரசு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவின் விசாரணையின் போது, தொழில்நுட்ப வசதிகளின் உதவியுடன் தாஜ் மஹால் இழந்த வெண்மை நிறத்தை மீட்க அரசு முயற்சி எடுக்க வேண்டும் என கூறப்பட்டது. 
 
ஆனால், தாஜ் மஹால் நிறம் மாறுவதற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது. அதாவது, அதனை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதால், மாசு அதிக அளவில் தாக்குவதாலும், புற ஊதா கதிர்களின் தாக்கமும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. 
 
இதை கவனிக்காமல் விட்டால், வெள்ளை நிறத்தில் இருந்து பழுப்பாகி தற்போது பச்சை நிறமாக மாறி வருவது விரைவில் சிவப்பு நிரத்தில் மாறக்கூடும் என கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்