தற்கொலைக்கு முயற்சித்த ஸ்ரீ ரெட்டி

Webdunia
வியாழன், 19 ஏப்ரல் 2018 (16:50 IST)
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தற்கொலை செய்ய போவதாக கூறியுள்ளார்.
 
திரையுலகில் பட வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கு பழக்கம் உள்ளது என கூறி தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி  ஸ்ரீலீக்ஸ் என்கிற தலைப்பில், பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
 
மேலும், கடந்த 7ம் தேதி தெலுங்கு சினிமா சேம்பர் அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின், நடிகர் பவண் கல்யாணை அண்ணை என்று கூப்பிடத்தற்கு வெட்கப்படுகிறேன் என கூறி அவருக்கு விரலால் ஆபாசமாக சைகை செய்தார். இதற்கு பவன் கல்யான் ரசிகர்கள் ஸ்ரீ ரெட்டியை சமூக வளைதளங்களில் கேவலமாக விமர்சித்து வந்தனர்.
 
இந்த நிலையில் ஸ்ரீரெட்டி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். இது குறித்து சமூக ஆர்வலர் சந்தியா கூறியிருப்பதாவது;-
 
“ஸ்ரீ ரெட்டி நேற்றிரவு எனக்கு போன் செய்து நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என கூறினார். இதனால் நான் உடனே அவர் வீட்டிற்கு சென்று என் வீட்டிற்கு அழைத்து வந்தேன்” என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்