இலங்கை நாடாளுமன்றம் இன்று கலைப்பா?

புதன், 7 நவம்பர் 2018 (20:30 IST)
இலங்கையில் இரண்டு பிரதமர், இரண்டு சபாநாயகர் என குழப்பமான சூழல் நிலவி வரும் நிலையில் இன்றிரவு அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்க வாய்ப்பு இருப்பதாக இலங்கையின் முன்னணி செய்தி நிறுவனங்கள்  உறுதிப்படுத்தாத செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சற்றுமுன்னர் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா என்பவர் கூறியபோது, 'தான் இன்று நாடாளுமன்றம் சென்றபோது, நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்க வாய்ப்பு இருப்பதாக தனக்கு தகவல் கிடைத்ததாக கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் அஜீத் பீ பெரேரா வெளியிட்டுள்ள இந்த தகவல் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை பாராளுமன்றம் வரும் 16ஆம் தேதி கூடும் என்றும், அன்றைய தினம் பிரதமர் ராஜபக்சே நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்