அனிதா வேடத்தில் ஜூலியா? - பொங்கும் நெட்டிசன்கள்

செவ்வாய், 6 மார்ச் 2018 (14:12 IST)
நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா வேடத்தில் பிக்பாஸ் ஜூலி நடிக்க இருப்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 
ஜல்லிக்கட்டு மூலம் ஜூலி எவ்வளவு புகழடைந்தாரோ அதை விட அதிகமாக அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெயரை கெடுத்துக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவரின் நடவடிக்கை காரணமாக எல்லோருடைய வெறுப்பையும் அவர் சம்பாதித்தார்.
 
தற்போது தன்னுடைய நர்ஸ் பணியை விட்டு விட்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அவர் பணிபுரிந்து வருகிறார். திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும் அவர் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில்தான், மாணவி அனிதாவின் வேடத்தில் அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. அப்படத்திற்கு டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால், அனிதா வேடத்தில் ஜூலி நடிக்க பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அனிதா முகத்தில் இருக்கும் அப்பாவித்தனம் ஜூலியின் முகத்தில் இல்லை. படக்குழு அவருக்கு பதிலாக வேறு ஒருவரை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஜல்லிக்கட்டு தொடர்பான படத்தில் வேண்டுமானால் ஜூலியை நடிக்க வைக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
ஆனால், அனிதாவாக நான் என்ன நடித்தால் என்ன தவறு? படத்தை பார்த்துவிட்டு பேசுங்கள் என ஜூலி பதிலடி கொடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்