இந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்....!

காய்களை பொதுவாக சமைத்து சாப்பிடுவது சிறந்தது என்று சொல்வதை கேட்டியிருப்போம். ஆனால் சில காய்கள் பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.  குறிப்பாக இவைகள் சாமைத்து சாப்பிடுவதை விடவும் அப்படியே சாப்பிடுவதால் முழு சத்துகளையும் பெற்று ஆரோக்கியமாக வாழ துணை புரிகிறது.
முள்ளங்கியை சமைத்து சாப்பிடுவதை விடவும் பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு சத்தி அதிகரிக்க செய்கிறது. சக்கரையின் அளவும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
 
பசலைக்கீரையில் வைட்டமின் கே மற்றும் இரும்பு சச்து நிறைந்துள்ளது. உடல் எடை குறைவதற்கும் உடல் உலிமை பெறும். இது உதவுகிறது. வேக வைத்து  சாப்பிடுவதை விட இதை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது.
 
இரத்த சோகை உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய முக்கிய காய்களில் இதுவும் ஒன்று. நம் உடலின் இரத்ததின் அளவை அதிகரிக்க செய்வதில் பீட்ரூட் முக்கிய பங்காற்றுகிறது.
 
கேரட்டில் வைட்டமின் ஏ, நிறைத்துள்ள கேரட் கண்பார்வைக்கு மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான ஆற்றலையும் அளிக்கிறது. கேரட்டை சமைத்தோ அல்லது மாத்திரை வடிவமாகவோ சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற முடியும்.
 
தக்காளியில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பல்வேறு சருமப் பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வுகளை அளிக்கிறது. புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க கூடிய சக்தி தக்காளிக்கு உள்ளது. உடலின் கொழுப்பை கூட குறைத்துவிடும்.
 
தினமும் முளைகட்டிய பயிரை சாப்பிடுவதால் உடல் வலுப்பெற்று ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. மதிய மற்றும் இரவு உணவுகளுடன், வேகவைக்காத முளைகட்டிய தானியங்களை சேர்த்துச் சாப்பிடலாம். முளைகட்டிய பச்சைப்பயறு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது என்பதால், 5 - 10 வயதுக்  குழந்தைகளுக்கு  அதை அடிக்கடி தரலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்