‘விசுவாசம்’ படத்தில் அஜித்துக்குத் தாய்மாமனாக நடிப்பவர் யார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 25 மே 2018 (16:58 IST)
‘விசுவாசம்’ படத்தில் அஜித்துக்குத் தாய்மாமனாக நடிப்பவர் யார் என்ற விவரம் கிடைத்துள்ளது. 
அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகிவரும் படம் ‘விசுவாசம்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு,  ஹைதராபாத்தில் கடந்த 7ஆம் தேதி தொடங்கியது.
 
அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘மெர்சல்’ படத்தில்  நடித்த சிட்டுக்குருவி பாட்டியும் இதில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில், அஜித்தின் தாய் மாமனாக தம்பி ராமையா நடிக்கிறார். அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் ஏற்கெனவே வெளியான ‘வீரம்’ மற்றும்  ‘வேதாளம்’ படங்களிலும் தம்பி ராமையா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்