ராஜஸ்தான் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்திய ரஜினியின் '2.0'

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (17:52 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் கடந்த 29ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வெற்றி நடைபோட்டு வருவது தெரிந்ததே. இந்த படம் செல்போன் கதிர்களால் பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து அழுத்தமாக கூறியுள்ளது பலரை விழிப்புணர்ச்சி அடைய செய்துள்ளது. செல்போன் உபயோகத்தை குறைக்க போவதாகவும், பறவைகளுக்கு இனி ரெகுலராக பறவைகளுக்கூ தண்ணீர் வைக்கப்போவதாகவும் டுவிட்டரில் பலர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ள ராஜஸ்தான் தேர்தலில் '2.0' திரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் போஸ்டரில் ஒருபக்கம் ரஜினியும் இன்னொரு பக்கம் அக்சயகுமாரும் இருப்பதை போல் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே அவர்கள் ஒருபக்கமும் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சச்சின் பைலட் அவர்களின் புகைப்படங்கள் கொண்ட போஸ்டர்கள் மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டு வருகிறது.

மேலும் இந்த போஸ்டரில் 2.0 என்பதற்கு பதிலாக 2.00 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டமன்ற தொகுதிகள் உள்ளதை இது குறிப்பிடுகிறது. இந்த போஸ்டர் பொதுமக்களை கவர்ந்துள்ளது மட்டுமின்றி ஓட்டு போட வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்