ஒட்டப்பிடாரத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் கிருஷ்ணசாமி

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2016 (13:17 IST)
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.


 

 
2016 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி  இடம் பெற்றுள்ளது.
 
அந்த கட்சிக்கு  4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி கிருஷ்ணசாமி தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
 
இந்நிலையில், தான் போட்டியிடும் ஒட்டபிடாரத்தில் கிருஷ்ணசாமி, தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகாமியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்