பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை - சோனா சவுத்தரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 13 மே 2016 (13:27 IST)
பெண் விளையாட்டு வீராங்கனைகள் நிர்வாகிகளால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக, இந்திய பெண்கள் கால்பந்து கேப்டன் சோனா சவுத்தரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
 

 
இந்திய பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக பணியாற்றியவர்  சோனா சவுத்தரி. இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு கால்பந்து விளையாட்டில்  இருந்து ஓய்வு பெற்றார்.
 
இந்த நிலையில், கேம் இன் கேம் என்ற சுயசரிதை புத்தகத்தை சோனா சவுத்தரி எழுதி வெளியிட்டுள்ளார். அதில், அவர்  பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது:-
 
கால்பந்து வீராங்களைகள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகளால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுள்ளனர். குறிப்பாக, வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். விளையாட்டு அணியில் இடம் பெற அட்ஜஸ் மெண்ட்  செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் செய்யப்பட்டனர்.
 
இது சம்பவங்கள் குறித்து பல முறை புகார் தெரிவித்தும் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது ஒரு முறை கூட விசாரணை செய்யப்படவில்லை.
 
ஆனால், இதையும் தாண்டி அவர்கள் தங்களது சாதனையை பதிவு செய்தனர் என தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார். அவரது இந்த புத்தகம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
அடுத்த கட்டுரையில்