கோவையில் பாஜக அதிமுக கட்சியினர் மோதல்

Webdunia
ஞாயிறு, 15 மே 2016 (17:16 IST)
கோவையில் வானதி சீனிவாசன் பிரச்சாரம் செய்ததாக அதிமுக கட்சியினர் பிரச்சனை செய்தலால் இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

 
கோவை தெற்கு தொகுதி வாந்தி சீனிவாசன், தேர்தல் பிரச்சாரம் விதி முறையை மீறியதாக கூறி திமுகவினர் பிரச்சனை செய்தனர். இதனால் திமுக, பாஜக கட்சினர் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
 
இந்த கலவரத்தில் வானதி சீனிவாசனின் உதவியாளர் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. 
 
இதுகுறித்து வானதி சீனிவாசன் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:-  
 
கோவை ரங்கை கவுடர் வீதியில், நான் எனது குடும்ப நண்பர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க சென்ற போது 2 மணி அளவில் திமுக கவுன்சிலர் ஆதிநாரயணன் உடன் சேர்ந்து கிட்டத்தட்ட 40 பேர் சேர்ந்து என் காரை மறித்துக் கொண்டு எப்படி நீங்கள் இங்கு வரலாம் என்று பிரச்சனை செய்தனர், என்றார்.
 
இதையடுத்து தேர்தல் பாதுகாப்புக்கு வந்துள்ள ராணுவ படையினர், கலவரம் நடந்த இடத்துக்கு வந்த பின்னரே இரு கட்சினரும் கலைந்து சென்றனர்.  
 
மேலும் வானதி சீனிவாசன் தேர்தல் விதிமுறையை மீறியதாகவும், அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தொண்டர்கள் அனைவரும் திமுக கட்சி அலுவலகம் முன் போராட்டம் செய்தனர். 

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்