மைனா நந்தினியின் பிக்பாஸ் சம்பளத்தை கேட்டு அதிர்ந்து போன தனலட்சுமி!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (11:08 IST)
தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நடந்துக்கொண்டிருக்கிறது. இதில் சரவணன் மீனாட்சி புகழ் மைனா நந்தினி போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளர். சீரியல் நடிகையாக புகழ் பெற்ற இவர் முதல் கணவரின் இறப்பு பின்னர் யோகேஷ் என்ற டான்சரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். தொடர்ந்து மைனா திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக கமலின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் பிக்பாஸில் சிறப்பாக விளையாடி வருகிறார். 
 
தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மைனா சக போட்டியாளர்களுடம் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது தனக்கு 1.5 லட்சம் ஒரு நாளைக்கு சம்பளம் கொடுக்கிறார்கள் என கூறி அதிர வைத்தார். அதை கேட்டு தனலட்சுமி வாயடைந்து போய்விட்டார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்