அதில் குக்கிராமத்தில் பிறந்து ,அரசு பள்ளியில் படித்து, வழகறிஞராகி மத்தியில் ஆளும் பெரிய கட்சியின் மகளிரணி தேசிய தலைவர் என்ற நிலைக்கு வந்திருப்பதாகவும், கோவை தெற்கு தொகுதியில் 5 வருடமாக கோவை தெற்கு தொகுதியில் மக்கள் சேவை செய்து வருகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
"துக்கடா" அரசியல்வாதி என்ற விமர்சனம் மூலம் பெண்களுக்கு மக்கள் நீதி மய்யம் கொடுக்கும் மரியாதை இதுதானா? எனவும்,பொது வாழ்வில் பல தடைகளைக் கடந்து வரும் பெண்களை இப்படித்தான் கேவலப்படுத்துவார்களா ? பெண்களை இப்படி பேசுபவர்கள்தான் பெண்களை காப்பாற்றுவார்களா என்பதை உணரவேண்டும் என தெரிவித்துள்ள வானதி சீனிவாசன்,மக்கள் நீதி மையம் மற்றும் கமலஹாசன் ஆகியோர் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள வீடியோவில் வலியுறுத்தியுள்ளார்.