பெண்களை இழிவாக பேசுவது திமுகவின் பரம்பரை - வானதி சீனிவாசன் பதிலடி!

சனி, 27 மார்ச் 2021 (14:51 IST)
பெண்களை இழிவாக பேசுவது திமுகவின் பரம்பரை குணம் என பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பதிலடி.

 
கோவையில் அடுத்தடுத்து விறு விறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் தேர்தல் பிரச்சாரங்கள் சென்று கொண்டிருக்கின்றன. நட்சத்திர வேட்பாளர் போட்டியிடக் கூடிய தொகுதி அவரை ஆதரித்து நடிகர் நடிகைகள் தினம்தோறும் வருகை அதேபோல முக்கிய பிரமுகர்கள் வருகை என தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. 
 
இந்த நிலையில் நேற்று முன்தினம் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட கூடிய தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக வந்த தி.மு.க வின் கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி பெண்களுடைய இடுப்பு குறித்து ஆபாசமாக பேசியதற்கு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடக் கூடிய அகில இந்திய பாரதிய ஜனதா மகளிர் அணி தலைவியும், தெற்கு தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 
 
பொதுவான இடத்தில் தேர்தல் குறித்து வாக்கு சேகரிக்க வந்துள்ள தி.மு.க வின் லியோனி பெண்களுடைய இடுப்பை அதனுடைய அளவை குறிப்பிட்டு மிகவும் கொச்சையாக பேசியுள்ளார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதன் மூலம் மக்கள் தெரிந்து கொள்ளுங்கள் பெண்களை இழிவு படித்தி பார்ப்பது திமுக விற்கு வாடிக்கையான செயல், பரம்பரைக் குணம். இப்பொழுது சொல்லுங்கள் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று ஆதலால் வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என வானதி சீனிவாசன்  பேட்டியில் கூறி உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்